மதுபானத்துடன் இந்த “5” பொருட்களை சாப்பிடவே கூடாது..!!!
ஆல்கஹால் குடிப்பதால் புற்றுநோய் முதல் பல தீவிர நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. அதோடு கூட, மதுவுடன் எடுத்துக் கொள்ளும் சிற்றுண்டிகளும் உங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும்.
1. பொரித்த உணவுகள்
பொரித்த உணவில் சாசுரேடட் கொழுப்பு அதிகம் உள்ளது. பொதுவாகவே அதை எடுத்துக் கொள்வது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. அதிலும் மது அல்லது பீர் எடுத்து கொள்வதால் ஜீரணிப்பது மேலும் கடினமாகும் என நிபுணர்கள் கூறுகின்றனர். இதனால், இரண்டையும் ஒன்றாக உட்கொள்வது வயிற்று வலியை ஏற்படுத்தலாம். இதில் உள்ள சோடியம் உங்கள் உடலில் நீர் சத்து இழப்பை ஏற்படுத்தும். இது உயர் இரத்த அழுத்த பிரச்சனைக்கும் வழிவகுக்கும்.
2 சாக்லேட்
சாக்லேட்டில் கொழுப்பு, கோகோ மற்றும் காஃபின் ஆகியவை அதிகம் உள்ளது. அதை பீர் உடன் உட்கொள்வது உங்களை அதிக போதையை ஏற்படுத்தும். மேலும் தாகம் அதிகம் ஏற்படும்.
3. பர்கர்
மது அருந்தும் போது அதனுடன் பர்கர் சாப்பிட கூடாது என வால்லுநர்கள் தெரிவிக்கின்றனர். அவ்வாறு சாப்பிடும் போது, அதை ஜீரணிக்க கல்லீரல் கடுமையாக உழைக்க வேண்டும் என்பதோடு, அதிலிருந்து வெளியாகும் கொழுப்பு திசுக்களில் படிந்துவிடும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
4. சிட்ரஸ் பழங்கள்
ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் பழங்களை மது அருந்தும்போது தவிர்க்க வேண்டும். சிட்ரஸ் பழங்களில் அதிக அமிலம் உள்ளது. இது செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்பதால், சிட்ரஸ் பழங்களை எடுத்துக் கொள்ளக் கூடாது.
5. காரமான உணவுகள்
ஆல்கஹாலுடன் காரமான உணவை ஒருபோதும் சாப்பிட கூடாது. ஆல்கஹால் மற்றும் கார உணவுகளின் கலவையானது உடல் ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல. இவை கேடு விளைவிக்கும். காரமான உணவில் கேப்சைசின் உள்ளது. இதனால், ஹீட் பர்ன் எனப்படும் உடல வெப்பதினால் ஏற்படும் புண்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.