ரூ.36,000-க்கு கீழ் சென்றது தங்கத்தின் விலை!!

தொடர்ச்சியாக தங்கத்தின் விலை அதிக அளவிலான ஏற்ற இறக்கத்தைக் கண்டு வருகின்றது. இந்த நிலையில், இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.488 குறைந்துள்ளது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.61 குறைந்து ரூ.4,440க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ.488 குறைந்த தங்கத்தின் விலை ரூ.35,520-க்கு விற்பனையாகி வருகிறது.

வெள்ளியும் இன்று விலை குறைந்துள்ளது.  வெள்ளி, ஒரு கிராமுக்கு ஒரு ரூபாய் குறைந்து ரூ.70.00-க்கு விற்பனை செய்யப்படுகின்றது. ஒரு கிலோ வெள்ளி ரூ.70,000-க்கு விற்பனையாகிறது. 

சென்னையில் பல நாட்களாக ரூ.36,000 அருகிலேயே தங்கத்தின் விலை (Gold Rate) இருந்து வந்தது. இப்போது, பல நாட்களுக்கு பிறகு தங்கத்தின் விலை ரூ.36,000-க்கு கீழ் சென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது வாடிக்கையாளர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது.