ஜூலை அதிகம் விற்பனையாகி சாதனை படைத்த கார்

மாருதி சுசுகியின் வேகன்ஆர் தொடர்ந்து இரண்டாவது மாதமாக இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் கார் மாடலாக சாதனை படைத்துள்ளது. ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த காரின் 3389 யூனிட்கள் கூடுதலாக விற்பனையாகியுள்ளன. ஜூன் -2021 உடன் ஒப்பிடுகையில், மொத்தம் 19,447 யூனிட் வேகன் ஆர் விற்கப்பட்டது.  இந்த முறை கூடுதலாக 3389 யூனிட்கள் விற்கப்பட்டுள்ளன.

இதுமட்டுமின்றி, கடந்த ஆண்டு ஜூலை மாதத்தின் வேகன்ஆர் (Wagon R) விற்பனையுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், அது சுமார் 70 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் மொத்தம் 13,513 Wagon R கார்கள் விற்கப்பட்டன. நடுத்தர குடும்பத்திற்கு ஏற்ற காராக விளங்கும் மாருதி Wagon R, விலை மற்றும் பராமரிப்பு ஆகிய இரண்டு அம்சங்களிலும் சிறந்ததாக கருதப்படுகிறது.  டெல்லியில் இதன் எக்ஸ்-ஷோரூம் விலை, மாடலில் வகைகளை பொறுத்து, ரூ. 4,80,500 முதல் ரூ .6,33,000 வரை உள்ளது.

5 இருக்கைகள் கொண்ட காரில் பல சிறப்பு அம்சங்கள் உள்ளன. ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே சப்போர்ட், மேனுவல் ஏசி, நான்கு பவர் விண்டோஸ், கீலெஸ் என்ட்ரி மற்றும் ஸ்டீயரிங் மவுண்டட் ஆடியோ மற்றும் கால் கண்ட்ரோல் கொண்ட 7.0 இன்ச் டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது. பயணிகளின் பாதுகாப்பிற்காக டிரைவ் சைட் ஏர்பேக்குகள், இபிடியுடன் ஏபிஎஸ் மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள் போன்ற அம்சங்களும் இந்த மாடலில் உள்ளது.