இந்திய வீராங்கனைகள் போராடி தோல்வி.

டோக்கியோ ஒலிம்பிக்கில் பெண்கள் ஹாக்கி போட்டியில் இந்திய வீராங்கனைகள் கடைசி வரை போராடி தோல்வியைத் தழுவினர்.

3-வது ஆட்ட பகுதியில் இங்கிலாந்து வீராங்கனைகள் கோல் அடிக்கும் முயற்சியில் விளையாடினார்கள். அடிக்கடி பந்தை இந்திய கோல் கம்பம் அருகில் கடத்திச் சென்றனர். 35-வது நிமிடத்தில் இங்கிலாந்து மேலும் ஒரு கோல் அடித்து 3-3 என சமநிலைப் பெற்றது. கடைசி வினாடியில் இந்தியாவுக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அதை கோலாக மாற்ற இந்திய வீராங்கனைகள் தவறியதால் 3-3 என சமநிலைப் பெற்றது.

48-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை சரியான வகையில் பயன்படுத்தி கோல் அடித்தனர். இதனால் இங்கிலாந்து 4-3 என முன்னிலைப் பெற்றது. கடைசி 12 நிமிடங்களில் இந்திய வீராங்கனைகள் கோல் அடிக்க முயற்சித்தும் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் இந்திய பெண்கள் ஹாக்கி அணி 3-4 எனத் தோல்வி அடைந்து, ஹாக்கி வரலாற்றில் ஒலிம்பிக்கில் பதக்கம் பெறும் அரிதான வாய்ப்பை இழந்தனர்.