பெட்ரோல் டீசல் விலை நிலவரம்.

மக்களின் இன்றியமையாத தேவைகளில் ஒன்றாக இருக்கும் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வரை மாதம் இரு முறை,  நிர்ணயம் செய்யும் முறை பழக்கத்தில் இருந்தது.

ஐந்து மாநில சட்டசபை தேர்தல்களுக்கு பின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் முன்னதாக தொடர்ந்து அதிகரித்து வந்தது. சில நாட்கள் முன்னதாக, பெட்ரோல், டீசல் விலைகள் (Petrol, Diesel Price)  சதத்தை தாண்டி விட்டன. 

இந்நிலையில் இன்றைய பெட்ரோல் விலை 20வது நாளாக தொடர்ந்து  மாற்றம் ஏதும் இன்றி லிட்டருக்கு ரூ.102.49ஆக விற்பனை செய்யப்படுகிறது. அதே போன்று டீசல் விலையும் மாற்றம் ஏதும் இன்றி  ரூ. 94.39 என்ற விலையில் விற்கப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் (Corona Virus) பரவலை தடுக்க கடந்த ஆண்டு மார்ச் இறுதியில் முழுமையான லாக்டவுன்  அமல்படுத்தப்பட்டது. அதன் பின்னர் பெட்ரோல் டீசல் விலைகளில் மாற்றம் இல்லாமல் இருந்தது. அதன் பிறகு விலைகளில் தொடர்ந்து ஏற்ற இறக்கம் காணப்படுகிறது  என்பதோடு, பல இடங்களில் பெட்ரோல் விலை ரூ.100க்கு அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.