ரசிகர்களுக்கு அஜித் வெளியிட்ட ஸ்பெஷல் செய்தி.

நடிகர் அஜித், தனது மக்கள் தொடர்பாளர் வாயிலாக குறுந்தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் வலிமை (Valimai). இந்த படத்தை போனி கபூர் தயாரித்து வருகிறார். மேலும் இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக நீரவ் ஷா, இசையமைப்பாளராக யுவன் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். அஜித்துக்கு (Ajith Kumar) ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷியும், வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயாவும் நடிக்கின்றனர். வலிமை (Valimai) படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு முடிந்துவிட்டது.

சமீபத்தில் இந்த படத்தின் மோஷன் போஸ்டர் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்,  ஃபர்ஸ்ட் சிங்கள்ஸ் ஆகியவற்றை படக்குழு ரிலீஸ் செய்தது. தற்போது வலிமை படத்தின் டீஸரை வரும் ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாக உள்ளதாக கடந்த 3 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. அத்துடன் இந்த படம் செப்டம்பர் அல்லது அக்டோபரில் அதாவது தீபாவளிக்கு முன்பே ரிலீஸ் ஆகும் என தகவல்கள் பரவி வருகிறது.