பாவம் என்றால் என்ன?

கடவுள் சொல்லை கேளாமல் அதற்கு எதிராக செயல்படுத்தப்படும் எதுவும் பாவமே. பாவம் செய்யும் யாரும் நியாயபிரமாணத்தை மீறுகிறார்கள். நியாயபிராமாணத்தை மீறுவதே பாவம் (1 யோவான் 3:4)
கடவுள் சொல்லை கேளாமல் அதற்கு எதிராக செயல்படுத்தப்படும் எதுவும் பாவமே. பாவம் செய்யும் யாரும் நியாயபிரமாணத்தை மீறுகிறார்கள். நியாயபிராமாணத்தை மீறுவதே பாவம் (1 யோவான் 3:4)
பாவம் எங்கு இருநது தோன்றுகிறது-
பாவத்தின் இருப்பிடமே மனிதனின் இருதயம் தான்.
இருதயத்திலிருந்து பொல்லாத சிந்தனைகளும், கொலை பாதகங்களும், விபசாரங்களும், வேசித்தனங்களும், கனவுகளும், பொய்ச்சாட்சிகளும், புறப்பட்டு வரும். (மத்தேயு 15:19)
எவை எல்லாம் பாவம்?
ஒருவன் நன்மை செய்ய அறிந்தவனாக இருந்தும், அதை செய்யாமல் போனால் அது அவனுக்கு பாவமாயிருக்கும் (யாக்கோபு 4:17) நம்மில் பலர் செய்ய தகாதவைகளை செய்வது தான் பாவம் என்று நினைக்கிறார்கள். ஆனால் செய்ய தக்கவைகளை செய்யாமல் பாவம்தான். மாயக்காரராகிய வேதபாரகரே பரிசேயரே உங்களுக்கு ஐயோ நீங்கள் ஒற்தாமிலும் வெந்தையத்திலும் சீரகத்திலும் தசமபாகம் செலுத்தி நியாயபிராமணத்தில் கற்பித்திருக்கிற நீதியையும் இரக்கத்தையும் விசுவாசத்தையும் விட்டுவிட்டீர்கள். இவைகளையும் செய்ய வேண்டும்.
அவைகளையும் விடாதிருக்க வேண்டுமே (மத்தேயு 23:23) எந்த ஒரு மனிதனும் தான் கடவுள் நியமித்து அளவுகோலுக்கு வந்துவிட்டதாக நினைக்காதிருப்பானாக கடவுள் முழுமையான பூரணத்துவத்தை எதிர்பார்க்கிறார். எப்படி பார்த்தாலும் மனிதன் அதில் குறைவுள்ளவனாகவே இருக்கிறான். எல்லாரும் பாவம் செய்து தேவமகிமை அற்றவர்களாகி (ரோமல் 3:23) அதற்காக கடவுள் கொடுமையானவரே, இரக்கமற்றவரோ இல்லை. நாம் நம் பாவங்களை விட்டுவிடும் பொழுது அதனை முழுமையாக ஏற்று நம்மை கழுவி, சுத்திகரித்து, மறுமைக்கு செல்வதற்கான ரட்சிப்பு என்ற வாக்குறுதியை நமக்கு அளிக்கிறார். பாவத்தில் இருந்து விடுபட ஒரோ வழி ஏசு தான். இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணம் தற்செயலானதோ, விபத்தோ கிடையாது. பாவிகளை ரட்சிப்பதற்காக, பாடுகளை அனுபவித்து மரித்து 3-ம் நாள் உயிர்த்தெழ வேண்டும் என்பது தெய்வீக திட்டம். நமக்கான பாவமான ஏசு கிறிஸ்துவின் சிலுவை பாடுகளை கருத்தில் கொண்டு பாவ வழிகளை விட்டு அவரிடத்துக்கு மனம் திரும்பவும்.
டெனிஸ்டன்
தலைமை செய்தி ஆசிரியர் தமிழ்மலர் மின்னிதழ்.