பாடப்புத்தகத்தில் சாதி பெயர்கள் நீக்கம்.

தமிழக மாணவர்களுக்கான பள்ளி பாடப்புத்தகங்களில் உள்ள தமிழ் சான்றோர்களின் பெயர்களில் பின்னால் உள்ள சாதிப் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சிக்குயில் பல்வேறு சீர்த்திருத்த நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக, தமிழ்நாட்டில் பள்ளி பாடப்புத்தகங்களில் உள்ள தமிழ் சான்றோர்களின் பெயர்களில் பின்னால் உள்ள சாதிப் பெயர்கள் தற்போது நீக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பன்னிரெண்டாம் வகுப்பு (12th Class) பாடப் புத்தகங்களில் தமிழறிஞர்களின் பெயரில் பின்னால் உள்ள சாதிப் பெயர்கள் (Caste) நீக்கப்பட்டு புத்தகங்கள் அச்சிடப்பட்டு இருப்பது அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. மயூரம் வேதநாயகம் பிள்ளை என்பது வேதநாயகம் எனவும் உ.வே சாமிநாத அய்யர் என்பது உ.வே சாமிநாதர் எனவும் மாற்றப்பட்டுள்ளது. 

அதே போல நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை என்பது ராமலிங்கம் எனவும் மீனாட்சி சுந்தரம் பிள்ளை என்பது மீனாட்சி சுந்தரனார் எனவும் மாற்றப்பட்டுள்ளது. நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை என்பது ராமலிங்கம் என மாற்றப்பட்டுள்ளது. அதேபோல் மாயூரம் வேதநாயகம் பிள்ளை என்பது வேதநாயகம் என பாடப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.