5 விக்கெட் வித்தியாசத்தில் திண்டுக்கல்லை வீழ்த்தியது நெல்லை.
நெல்லை அணி பெற்ற இரண்டாவது வெற்றி இதுவாகும்.
நெல்லை சார்பில் அதிசயராஜ் 2 விக்கெட்டும், ஹரிஷ், திரிலோக் நாக், சஞ்சய் யாதவ் தலா ஒரு ஒரு விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து 149 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெல்லை அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் பாபா அபராஜித் சிறப்பான தொடக்கம் கொடுத்தார். அவர் 44 ரன்னில் ஆட்டமிழந்தார். சஞ்சய் யாதவ் 32 ரன்கள் சேர்த்தார்.
இறுதியில், நெல்லை அணி 5 விக்கெட் இழப்புக்கு 149 எடுத்து வெற்றி பெற்றது. நெல்லை அணி பெற்ற இரண்டாவது வெற்றி இதுவாகும்.