About us இந்தியா-நேபாளம் இடையே விமான போக்குவரத்து! December 11, 2020December 31, 2020 AASAI MEDIA இந்தியா-நேபாளம் இடையே விமான போக்குவரத்து!இந்தியா – நேபாளம் இடையே விமானப் போக்குவரத்து சேவையை மீண்டும் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.முதல்கட்டமாக இருநாட்டு தலைநகர்களான தில்லி – காத்மண்டு இடையே நாளொன்றுக்கு ஒரு விமானத்தை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.கடந்த சில நாள்களுக்கு முன்பு விமான சேவையைத் தொடங்குவது குறித்து நேபாளத்திற்கு மத்திய அரசு சார்பில் பரிந்துரை செய்யப்பட்ட நிலையில், தற்போது நேபாள அரசு ஒப்புதல் அளித்துள்ளது.இந்திய வெளியுறவுத்துறை செயலர் ஹர்ஷ் வர்தன் ஸ்ரீங்காலா, நேபாளத்திற்கு கடந்த சில நாள்களுக்கு முன்பு சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது இரு நாட்டு மக்களுக்கிடையேயான போக்குவரத்து தொடர்பு பற்றி எடுத்துரைக்கப்பட்டது.இரு நாடுகளுக்கிடையே இயக்கப்படும் விமானசேவையில், உரிய விசா வைத்திருப்பவர்களும், இரு நாட்டு குடிமக்களும் பயணிக்கலாம் என்று தெரிவிக்கப்படடுள்ளது.தில்லியிலிருந்து காத்மண்டுவிற்கு ஏர் இந்தியா நிறுவனம் விமானத்தை இயக்கவுள்ளது.கரோனா தொற்றால் கடந்த மார்ச் மாதம் முதல் சர்வதேச விமானப் போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது. எனினும் வந்தே பாரத் திட்டத்தின்கீழ் வெளிநாடுகளில் சிக்கியிருந்த நபர்களை மீட்டு வர விமானங்கள் இயக்கப்பட்டன.S. சரவணன் செய்தியாளர் தமிழ்மலர் மின்னிதழ்.