ரஷ்ய தூதாண்மை அதிகாரிகள் அமெரிக்காவை விட்டு வெளியேற கெடு விதித்தார் ஜோ பைடன்

அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான உறவு மோசமடைந்து வருவதால், வரும் காலங்களில் இரு வல்லரசுகளுக்கும் இடையே கடும் மோதலை உலகம் காணக்கூடும்.  

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் (Joe Biden) நிர்வாகம் 24 ரஷ்ய தூதர்களை நாட்டை விட்டு வெளியேறுமாறு கூறியுள்ளது. தூதாண்மை அதிகாரி அனடோலி அன்டோனோவை மெற்கோள் காட்டிய செய்தி நிறுவனமான ஷின்ஹுவா,  பெரும்பாலான தூதாண்மை அதிகாரிகள் அமெரிக்காவை விட்டு வெளியேறுவார்கள் என்று தெரிவித்துள்ளது. அமெரிக்கா விசா வழங்கும் நடைமுறைகளை திடீரென கடுமையாக்கியுள்ளதே இதற்குக் காரணமாகும். அமெரிக்காவின் இந்த நடவடிக்கை இரு நாடுகளுக்கும் இடையே பதற்றத்தை அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஷ்யாவிற்காக மட்டுமே விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன

அமெரிக்காவுக்கான (America) ரஷ்ய தூதர் அனடோலி அன்டோனோவ் வாஷிங்டனின் பத்திரிகை ‘தி நேஷனல் இன்டரஸ்ட்’ உடன் உரையாடினார். அப்போது அவர், ‘எங்களுக்கு தூதாண்மை அதிகாரிகளின் ஒரு பட்டியல் கிடைத்தது. இவர்கள் 3, 2021 க்கு முன்னர் அமெரிக்காவை விட்டு வெளியேறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.