Ola Electric Scooter இந்த தேதியில் அறிமுகம் ஆகும்.
ஓலா மின்சார ஸ்கூட்டருக்கான காத்திருப்பு முடிந்தது. இந்த ஸ்கூட்டர் அறிமுகமாகவுள்ள தேதியை நிறுவனம் அறிவித்துள்ளது.
ஓலா தலைமை நிர்வாக அதிகாரி பவிஷ் அகர்வால் தனது ட்வீட்டில், ’எங்கள் ஸ்கூட்டரை முன்பதிவு செய்தவர்களுக்கு நன்றி! ஆகஸ்ட் 15 ஆம் தேதி ஓலா ஸ்கூட்டர் அறிமுக விழாவை நடத்த திட்டமிட்டுள்ளேன். ஸ்கூட்டரின் முழு விவரக்குறிப்பு, விவரங்கள் மற்றும் கிடைக்கும் தேதிகள் அனைத்தும் விரைவில் பகிரப்படும்.’ என எழுதியுள்ளார்.
ஓலா (Ola) ஸ்கூட்டர்களுக்காக ஆவலுடன் காத்திருந்த மக்களுக்காக, நிறுவனம் ஜூலை மாதம் முன்பதிவை தொடங்கியது. முன்பதிவு தொடங்கி சில நாட்களிலேயே முன்பதிவுகளின் எண்ணிக்கை லட்சங்களை எட்டியது. இந்த ஸ்கூட்டரின் முன்பதிவு ஆன்லைனில் வெறும் 499 ரூபாய்க்கு தொடங்கியது. முன்பதிவு தொடங்கிய 24 மணி நேரத்தில், நிறுவனம் 1 லட்சத்திற்கும் அதிகமான முன்பதிவுகளைப் பெற்றது.