குற்ற உணர்ச்சியில் கதறிய யாஷிகா; வெளியான உருக்கமான பதிவு.

விபத்தில் தோழி உயிரிழந்ததை அறிந்த நடிகை யாஷிகா உயிருடன் வாழவே குற்ற உணர்ச்சியாக இருக்கிறது என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

இந்த நிலையில் இவர் கடந்த 24 ஆம் தேதி நள்ளிரவு தனது நண்பர்களுடன் பார்ட்டிக்கு சென்றுவிட்டு திரும்பினார். காரை யாஷிகா ஆனந்த் (Yashika Aannand) ஓட்டியதும் அவருக்கு அருகே அவரது தோழி வள்ளிச்செட்டி பவானி அமர்ந்திருந்தார். அப்போது அவரது கார் கிழக்கு (Car Accident) கடற்கரைச் சாலையில் சூலேறிக்காடு அருகே கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த தடுப்பு மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த கோர விபத்தில் யாஷிகா மற்றும் அவரது நண்பர்கள் இருவர் படுகாயங்களுடன் உயிர் தப்பிய நிலையில் யாஷிகா ஆனந்த்தின் தோழி வள்ளிச்செட்டி பவணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் காரை அதிவேகமாக ஓட்டியதாக யாஷிகா ஆனந்த் மீது வழக்கு பதியப்பட்டு அவரது ஓட்டுனர் உரிமம் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த விபத்தில் சிக்கிய யாஷிகாவுக்கு இடுப்பு மற்றும் முதுகில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும் சாதாரண வார்டுக்கு மாற்றம் செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது. 

இந்த நிலையில், சிகிச்சையில் இருந்த போது தோழி பவணி உயிரிழந்ததை அறிந்திடாத யாஷிகாவிடம் வள்ளிச்செட்டி பவணி உயிரிழந்தது பற்றி அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளனர். கதறி அழுத யாஷிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “நான் இப்போது என்ன செய்யப் போகிறேன் என்பதை என்னால் உண்மையில் வெளிப்படுத்த முடியாது. நான் மட்டும் உயிருடன் இருப்பதில் எப்போதும் குற்ற உணர்ச்சியோடு இருப்பேன். இந்தக் கோர விபத்தில் இருந்து என்னை காப்பாற்றிய கடவுளுக்கு நன்றி சொல்வதா இல்லை என் உயிர் தோழியை கொண்டு சென்றதற்கு கோபப்படுவதா என்று தெரியவில்லை. ஒவ்வொரு நொடியும் நான் உன்ன மிஸ் பண்றேன் பவானி. என்னை ஒரு போதும் நீ மன்னிக்க மாட்ட. உன் குடும்பத்தை இப்படி ஒரு மோசமான நிலைக்கு தள்ளி விட்டேன். உன் ஆன்மா சாந்தியடைய நான் பிராத்திக்கிறேன். நீ என்னிடம் திரும்பி வருவாய் என்று எதிர்பார்க்கிறேன். என்றாவது ஒருநாள் உன் குடும்பத்தினர் என்னை மன்னிப்பார்கள் என்று நம்புகிறேன்” என்று பதிவிட்டிருந்தார் யாஷிகா ஆனந்த்.