தளபதி விஜய் போல் நடனமாடிய பிரபல கிரிக்கெட் வீரர்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான திரைப்படம் மாஸ்டர். இந்த படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது.
இந்த பாடலுக்கு விளையாட்டு வீரர்கள், பல்வேறு திரையுலகை சேர்ந்தவர்கள் இப்பாடலுக்கு நடனமாடி வீடியோவை அவ்வபோது வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது ஆஸ்திரேலிய அணியின் அதிரடி வீரரான டேவிட் வார்னர் (David Warner), வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடி, அந்த வீடியோவை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
டிவியில் விஜய்யின் (Actor Vijay) வாத்தி கம்மிங் பாடல் ஓட, அதைப் பார்த்துக் கொண்டே, விஜய்யின் ஸ்டெப்களை ஆடுவது போன்ற காட்சிகள் இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளன. அந்த வீடியோவில் வார்னரின் மகளும் இடம்பெற்றிருக்கிறார். சின்னக் குழந்தைகளை தனது நடிப்பால், ஆடலால், பாடலால் கவர்ந்திருக்கும் விஜய், டேவிட் வார்னர் மகளையும் கவர்ந்திருப்பதாக தெரிகிறது. சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவுக்கு லைக்குகளும் குவிந்து வருகிறது.