விண்வெளி கதிர்வீச்சால் மனிதர்களுக்கு ஏற்படும் தாக்கம் என்ன தெரியுமா?

உலகம் பல விண்வெளி ஆய்வுப் பயணங்களை ஆரம்பித்து, சந்திர விண்வெளி ஆராய்ச்சி மற்றும் செவ்வாய் கிரகத்தை காலனித்துவப்படுத்துவது பற்றி சிந்தித்து வருகிறது.

கதிர்வீச்சுகளில் அணு அளவிலான பீரங்கிப் பந்து போல செயல்படும் துகள்கள் இருக்கும். இந்த துகள்கள் தான் கடந்து செல்லும் எதையும் மாற்றும் தன்மை கொண்டது. இது விண்வெளி வீரர்களின் ஆரோக்கியத்திற்கு ஆபத்தை ஏற்படுத்துகிறது.ஏனெனில் அவர்கள் நீண்ட காலத்திற்கு இந்த கதிவீச்சின் தாக்கத்தை அனுபவிக்கின்றனர். கதிர்வீச்சுகள் மில்லி-சீவர்ட்டில் (mSV) அளவிடப்படுகிறது. விண்வெளி ஆராய்ச்சியில் விண்வெளி வீரர்கள் 50-2,000 mSV க்கு இடையில் கதிர்வீச்சுக்கு ஆளாகிறார்கள். அதாவது, 1 mSV கதிர்வீச்சு மூன்று மார்பு எக்ஸ்-கதிர்கள் இருப்பதற்கு சமம். ஆகையால், விண்வெளி வீரர்கள் அனுபவிக்கும் வெளிப்பாடு 150-6,000 மார்பு எக்ஸ்-கதிர்களுக்கு இடையில் உள்ளது.

மனித டிஎன்ஏவை கதிர்வீச்சின் இழைகளை உடைத்து சேதப்படுத்தும் என்பதே, கதிர்வீச்சு மனிதர்களை எவ்வாறு பாதிக்கிறது என்பதற்கான முதன்மை எடுத்துக்காட்டு. இந்த நிலையில் மனித செல்கள், சேதங்களை சரிசெய்ய முயற்சிக்கும்போது, ​​புற்றுநோய் ஏற்படக்கூடிய பிறழ்வும் ஏற்படலாம். மேலும், கதிர்வீச்சுகள் இதயம், தமனிகள் அல்லது இரத்தக் குழாய்களில் உள்ள உயிரணுக்களை சேதப்படுத்துவதன் மூலம் இருதய அமைப்பையும் பாதிக்கிறது. மற்ற தாக்கங்களை பொறுத்தவரை, மத்திய நரம்பு மண்டலத்தை சேதப்படுத்துவது மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ், அல்சைமர்ஸ் மற்றும் கீல்வாதம் போன்ற சீரழிவு நோய்கள் ஆகியவற்றையும் ஏற்படுத்தும்.