ஏழை இளைஞரை பெரும் தொழிலதிபர் ஆக்கிய தேள் விஷம்!


கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு ஊர் சுற்றிக்கொண்டிருந்த இளைஞர், பாலைவனங்களில் தேள் பிடித்து விளையாடிக்கொண்டிருந்தவர் அந்த தேள்களை வைத்தே எகிப்தில் பெரும் கோடீஸ்வரர் ஆகிவிட்டார்
புற்று நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட உடல் பிரச்சனைகளுக்கு மருந்துகள் தயாரிக்க தேள் விஷம் பயன்படுத்தப்படுகிறது என்கிற விசயமும், மருந்துகள் தயாரிக்க தேள் விஷம் தேவைப்படுகிறது என்பதையும் அறிந்துகொண்டு, பாலைவனத்தில் பிடித்து வந்த தேள்களில் இருந்து விஷம் எடுத்து விற்று வந்தார் முகமது ஷம்டி போஷ்டா(27).
ஒரு கிராம் தேள் விஷம் 7 லட்சத்திற்கு ( இந்திய மதிப்பில்) விற்பனை ஆனதால், அந்த தொழிலில் நல்ல லாபம் இருக்கிறது என்பது தெரியவந்ததும், ‘கெய்ரோ வெனோம்’என்று தனி நிறுவனத்தையே தொடங்கிவிட்டார்.
ஒரு தேளில் 20 ஆயிரம் முதல் 50 ஆயிரம் டோஸ் வரையிலும் விஷம் சேகரிக்கிறார். ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளுக்கு தொடர்ந்து ஏற்றுமதி செய்து வருகிறார்.
இதன் மூலம் இன்றைக்கு பெரும் கோடீஸ்வரர் ஆகிவிட்ட முகமது ஹம்டி போஷ்டா, 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தேள்களை வளர்க்கிறார். பாம்புகளின் விஷமும் மருந்துகள் தயாரிக்க தேவைப்படுகிறது என்பதால், பல வகையான பாம்புகளையும் வளர்த்து வருகிறார்.
K.N. அப்துல் ரசாக் செய்தியாளர் தமிழ்மலர் மின்னிதழ்.