மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவு!

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வருகையையொட்டி கோவையில் நாளைமுதல் டிரோன் பறக்கத் தடை விதித்து மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவிட்டுள்ளார்.
தமிழக சட்டப்பேரவை நூற்றாண்டு விழா மற்றும் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவ படத்தை திறந்து வைப்பதற்காக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த இன்று தமிழகம் வந்துள்ளார்.
சென்னையில் இன்று பேரவை நூற்றாண்டு விழாவில் பங்கேற்கும் குடியரசுத் தலைவர், நாளை காலை கோவை சென்று அங்கிருந்து உதகை செல்லவுள்ளார். பின், ஜூலை 6ஆம் தேதி கோவையிலிருந்து தில்லி புறப்பட்டுச் செல்கிறார்.
இதையடுத்து, கோவை சூலூர் விமான நிலையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை காலை முதல் ஆகஸ்ட் 6 வரை டிரோன்கள் பறக்கத் தடைவிதித்து மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவிட்டுள்ளார்.

செய்தி:S. ரவூப்