இந்தியாவை மின்னணுக் கழிவுகளின் தொட்டியாக்குகிறதா வளர்ந்த நாடுகள்?

உலகில் உள்ள வளர்ந்த நாடுகள் இந்தியாவை தங்கள் விரயப் பொருட்களின் குப்பைத் தொட்டியாக்கி வருகின்றன என்று சமூக ஆர்வலர்கள், சில ஊடகங்கள் சிறிது காலமாகவே கவலை வெளியிட்டு வருகின்றன.

உலகில் உள்ள வளர்ந்த நாடுகள் இந்தியாவை தங்கள் விரயப் பொருட்களின் குப்பைத் தொட்டியாக்கி வருகின்றன என்று சமூக ஆர்வலர்கள், சில ஊடகங்கள் சிறிது காலமாகவே கவலை வெளியிட்டு வருகின்றன.

வளர்ந்த உலக நாடுகள் தங்களின் உடைந்த மின்னணு கழிவுகளான, கணினிகள், லேப்டாப்கள், டெலிபோன்கள், டெலிவிஷன்கள் ஆகியவற்றின் உடைந்த குப்பைகளை இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளில் கொண்டு வந்து கொட்டுவதாக புகார்கள் எழுந்து வருகின்றன.

வளர்ந்த நாடுகள் வளர்ந்து வரும் மற்றும் வளராத நாடுகளை தங்களின் குப்பைகளைக் கொட்டும் நாடுகளாக மாற்றியுள்ளனவா என்று பொறுப்பார்ந்த பத்திரிகைகள் சில கேள்வி எழுப்பி வருகின்றன. இந்த குப்பைகள் இந்தியாவின் நிலம், தண்ணீர் மற்றும் சுற்றுச்சூழலை பாதித்து இந்திய மக்களையும் பல்வேறு விதங்களில் பாதித்து வருகிறது.

உலகின் 90% மின்னணு கழிவுகள் சட்ட விரோதமாக வர்த்தகம் செய்யப்படுகின்றன, அல்லது சட்ட விரோதமாக வேறொரு நாட்டில் கொண்டு கொட்டப்படுகின்றன. இந்த குப்பைக் கழிவுகள் பெரும்பாலும் இந்தியாவில் முடிகின்றன. ஆசியாவில் சீனா, ஹாங்காங், பாகிஸ்தான், இந்தியா, வங்கதேசம், வியட்நாம் ஆகிய நாடுகளே இந்தக் கழிவுகள் நிரப்பப்படும் இடமாக உள்ளது.