ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலின் தலைமைப் பொறுப்பை ஏற்ற இந்தியா

நரேந்திர மோடி ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் ஆலோசனைக் கூட்டத்துக்கு தலைமை வகிக்கும் முதல் இந்தியப் பிரதமர் என்ற பெருமையைப் பெறவுள்ளார்.

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின் ஆகஸ்ட்டு மாதத்துக்கான தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது. இதனால், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் ஆலோசனைக் கூட்டத்துக்கு தலைமை வகிக்கும் முதல் இந்தியப் பிரதமர் என்ற பெருமையைப் நரேந்திர மோடி பெறவுள்ளார்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் செயல்படும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா, சீனா ஆகிய 5 நாடுகள் நிரந்தர உறுப்பினர்களாக உள்ளன. 10 நாடுகள் தற்காலிக உறுப்பினர்களாக 2 ஆண்டுகாலம் செயல்படும். இதில் இந்தியா தற்காலிக உறுப்பினராக கடந்த ஜனவரி மாதத்தில் பொறுப்பேற்றது.