சீனாவின் புதிய நண்பன் தலிபான்: ஆப்கானின் 3 ட்ரில்லியன் டாலர் கனிம வளங்களைக் குறிவைக்கும் சீனா
9/11 பயங்கரவாத இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பிறகு ஆப்கானிஸ்தான் மீது படையெடுத்த அமெரிக்கா தற்போது அந்த நாட்டை அப்படியே அத்ரதையாக விட்டுச் சென்றதையடுத்து அங்கு தலிபான்களின் ஆட்சி தலைத்தூக்கியுள்ளது.
அமெரிக்கப் படைகள் அங்கிருந்து நகர்ந்தவுடன் ஜூலை 28ம் தேதி தலிபான் குழு ஒன்று சீனா சென்று நட்புக்கரம் நீட்டியுள்ளது. இதனையடுத்து தலிபான்களே சீனாவின் புதிய நண்பர்கள் என்று அரசியல் வட்டாரங்கள் பேசத் தொடங்கியுள்ளன.
தென்கிழக்கு ஆசியாவில் தன்னை ஒரு பெரும் சக்தியாக உருவெடுக்க வைக்க சீனா பல யுக்திகளைக் கையாண்டு வருகிறது, அந்தப் பொறியில் சமீபத்தில் சிக்கியுள்ளவர்களே தலிபான்கள்.
இந்நிலையில் சீனாவின் தியாஞ்ஜினில் தலிபான்களுக்கும் சீன வெளியுறவு அமைச்சகத்துக்கும் இடையே நடந்த பேச்சு வார்த்தைக் குறித்த புகைப்படத்தை சீன வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதில் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி, மறைந்த தலிபான் நிறுவனர் முல்லா உமரின் சகாவான அப்துல் கனி பரதரும் இருக்கிறார்.