தண்ணீருக்குள் கர்ப்பகால ஃபோட்டோஷூட் செய்து அசத்தும் வெண்பா..
சீரியல் நடிகை ஃபரீனா லேட்டஸ்ட்டாக, நீச்சல் குளத்தில், தண்ணீருக்கு அடியில், சிவப்பு நிற உடையில், பெரிய வயிற்றை காட்டி ஃபோட்டோஷுட் நடத்தி உள்ளார்.
தனியார் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகி வரும் மிக பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. மலையாளத்தில் ஒளிபரப்பான கருத்தமுத்து டிவி சீரியலின் ரீமேக் தான் பாரதி கண்ணம்மா. தமிழில் ஒளிபரப்பு ஆகி வரும் இந்த சீரியல் தமிழ் சின்னத்திரை ரசிகர்களின் மிகுந்த ஆதரவை பெற்றுள்ளது.
கடந்த 2019 ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த சீரியல் தற்போது வரை 500க்கும் மேற்பட்ட எபிசோட்களை கடந்து ஓடிக்கொண்டே இருக்கிறது. இதில் பாரதியாக அருண் பிரசாத்தும், கண்ணம்மாவாக ரோஷினி ஹரிபிரியனும், வெண்பாவாக ஃபரீனா ஆசாத்தும் (Farina Azad) நடித்து வருகின்றனர். இதில் வில்லியாக நடித்து வரும் வெண்பாவிற்கும் எக்கச்செக்க ரசிகர்கள் கூட்டம் உள்ளது.
பாரதியை ஒரு தலையாக காதலிக்கும் வெண்பா, அவரை திருமணம் செய்து கொள்ள பல சதிகளை செய்கிறார். இந்த சதித் திட்டத்தால் பாரதியும் கண்ணம்மாவும் (Bharathi Kannamma) பிரிந்து உள்ளனர். இப்படி பல திருப்பங்களுடன் இந்த சீரியல் சுவாரஸ்யமாக சென்று கொண்டிருக்கிறது.
சமீபத்தில் நிஜ வாழ்க்கையில் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்த வெண்பாவாக நடிக்கும் ஃபரீனா, இனி அவர் பாரதி கண்ணம்மா சீரியலில் நடிக்க மாட்டார். என பல விதமான வதந்திகளும், கேள்விகளும் எழுந்தது. ஆனால் அது எதுவும் உண்மையில்லை என்றும் பாரதி கண்ணம்மா கேரக்டரில் தான் தொடர்ந்து நடிக்க போவதாகவும், பிரசவத்திற்கு 2 மாதங்களுக்கு முன் தான் பிரேக் எடுத்துக் கொள்ள போவதாகவும் ஃபரீனா அறிவித்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் ஃபரீனா.