கேரளாவில் இருந்து தமிழகம் வர RTPCR சான்றிதழ் கட்டாயம்

ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் கேரளாவில் இருந்து தமிழகம் வர ஆர்டிபிசிஆர் சான்றிதழ் கட்டாயம் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

ஆகஸ்ட் 5 ஆம் தேதி முதல் கேரளாவில் (Kerala) இருந்து தமிழகம் வர ஆர்டிபிசிஆர் (RTPCR Test) சான்றிதழ் கட்டாயம் என்றும் அப்படி இல்லையென்றால் கேரளாவில் இருந்து வருபவர்கள் இரு தவணை தடுப்பூசி சான்று காட்ட வேண்டும் என்றும் விமான நிலையத்தில் 13 நிமிடத்தில் கொரோனா சோதனை முடிவை அறிவிக்கும் நடைமுறை விரைவில் அமலாகிறது என்றும் அமைச்சர் கூறியுள்ளார். 

இதற்கிடையில் கேரளாவில் கடந்த சில தினங்களாக தினசரி கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்திற்கும் அதிகமாக உள்ளதால் அங்கிருந்து தமிழகம் வருவோரை கண்காணிக்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. மேலும் தென்காசி மாவட்டம் புளியரை சோதனைச் சாவடியில் அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன.