விக்ரம் படத்தில் இணைந்த பிரபல நடிகர்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகி வரும் படம் விக்ரம்.

லோகேஷ் கனகராஜ் (Lokesh kanagaraj) இயக்கும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்ப்பை பெற்றது. விக்ரம் (Vikram) போஸ்டரில் ரசிகர்களை ஆச்சயப்படுத்திய விசயம் நடிகர் விஜய் சேதுபதி இப்படத்தில் நடிக்கிறார் என்பதுதான். அத்துடன் இந்த போஸ்டர் மூலம் இப்படத்தில் மலையாள நடிகர் பகத் பாஸில் நடிக்கிறார் என்ற தகவலும் வெளியானது. இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் விக்ரம் படத்தில் இணைந்திருக்கிறார். இதை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உறுதிபடுத்தி இருக்கிறார். இப்படத்தில் கமல்ஹாசனுக்கு மகனாக காளிதாஸ் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.