சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த எளிய வழி!

ஒவ்வொரு திசுவுக்கும் இந்த குளுகோஸ் செல்ல வேண்டுமானால், கணையத்தில் சுரக்கும் இன்சுலின் ஹார்மோன் தேவை.

இந்த இன்சுலின் போதுமான அளவு சுரக்கவில்லை என்றாலோ, சுரக்கும் இன்சுலின் ஆற்றல் கொண்டதாக இல்லை என்றாலோ ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்துவிடும். இதையே சர்க்கரை நோய் என்கிறோம்.

அறிகுறிகள்

தாகம், அடிக்கடி சிறுநீர் கழித்தல், திடீர் உடல் எடை குறைவு, எப்போதும் சோர்வான உணர்வு, எப்போதும் பசி, பார்வைத் திறன் குறைதல், பெண்களுக்கு வெள்ளைப்படுதல், கால் அல்லது பாதங்களில் புண் மெதுவாக ஆறுதல், உயர் ரத்த அழுத்தம் போன்றவை சர்க்கரை நோயின் அறிகுறிகளாகும்.

சர்க்கரை நோய்க்கான காரணிகள்

உடல் பருமன், உடல் உழைப்புக் குறைவு, மரபியல், வயது, உயர் ரத்த அழுத்தம், கொழுப்பின் அளவு அதிகரிப்பு, பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் என இதுபோன்ற பல்வேறு காரணங்களால் நம் உடலில் சர்க்கரை நோய் உருவாகின்றது.

சர்க்கரை நோயால் பாதிக்கபட்டவர்களுக்கு பக்கவாதம், பார்வைக் குறைபாடு, இதய நோய்கள், சிறுநீரக நோய்கள், செயலிழப்பு, நரம்பு மண்டலத்தில் பாதிப்பு (நியூரோபதி), காலில் புண் – அதனால் கால் இழப்பு போன்றவை ஏற்படும்.

ரத்தத்தில் சர்க்கரை அளவு – சாப்பிடுவதற்கு மூன்பு

இயல்பு – 70 லிருந்து 100 வரை

ப்ரீ டயாபடீஸ் – 101 லிருந்து 126 வரை

சர்க்கரை நோய் – 126-க்கு மேல்

ரத்தத்தில் சர்க்கரை அளவு – சாப்பிட்டு 2 மணி நேரத்துக்குப் பிறகு

இயல்பு – 140-க்கும் குறைவு

ப்ரீ டயாபடீஸ் – 140-200

சர்க்கரை நோய் -200-க்கு மேல்

சர்க்கரை நோய் வராமல் தடுக்க, செய்யவேண்டியவை

→ தினசரி 30 நிமிடங்கள் உடல் உழைப்பு

→ ஆரோக்கியமான உணவுப் பழக்க வழக்கம்

→ உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருப்பது போன்றவற்றின் மூலமே சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த முடியும்.