கடந்த 24 மணி நேரத்தில் 43,509 புதிய கொரோனா தொற்று பாதிப்பு…

கேரளாவில் புதிய கோவிட் -19 தொற்று பாதிப்புகள் பெரிய அளவில் அதிகரித்துள்ளது. நாட்டின் மொத்த பாதிப்பு எண்ணிக்கையில், கிட்டத்தட்ட பாதி அளவு பாதிப்பு கேரளா மாநிலத்தில் உள்ளது.

குண்மடையும் மொத்த விகிதம் 97.38 சதவீதமாக உயர்ந்துள்ளது. எனினும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை புதிய தொற்று நோய் பாதிப்புகளின் எண்ணிக்கையை விட குறைவாக இருந்தது. இன்று காலை 8 மணி நிலவரப்படி 38,465 பேர் COVID -19  தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதாக, தெரிவித்துள்ளது. நோய் தொற்றின் காரணமாக சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 4,03,840 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவின் கொரோனா தொற்று பாதிப்புகள் இந்த வாரத்தில் சிறிதளவு அதிகரித்துள்ளன. கேரளாவில் புதிய கோவிட் -19 தொற்று பாதிப்புகள் பெரிய அளவில் அதிகரித்துள்ளது ஒரு முக்கிய காரணங்களில் ஒன்றாகும். நாட்டின் மொத்த பாதிப்பு எண்ணிக்கையில், கிட்டத்தட்ட பாதி அளவு பாதிப்பு கேரளா மாநிலத்தில் உள்ளது