ஆடவர் ஹாக்கி அணி அசத்தல் வெற்றி…

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய ஹாக்கி அணி ஒலிம்பிக் சாம்பியனான அர்ஜென்டினாவை 3-1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து காலிறுதிக்குள் நுழைந்துள்ளது. 

  • இந்திய ஹாக்கி அணியின் அசத்தல் வெற்றி
  • அர்ஜென்டினாவை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது
  • குழுவின் கடைசி போட்டியில் இந்தியா ஜப்பானுடன் மோதும்.

இந்தியாவின்  வருண் குமார், ஆட்டத்தின் 43 வது நிமிடத்திலும், விவேக் சாகர் பிரசாத் 58 வது நிமிடத்திலும், ஹர்மன்பிரீத் சிங் 59 வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். 48 வது நிமிடத்தில் அர்ஜென்டினாவுக்காக ஷூத் காசெல்லா ஒரே ஒரு கோல் அடித்தார். 

இந்த வெற்றியை அடுத்து இந்திய ஆண்கள் ஹாக்கி அணி சாம்பியன் அர்ஜென்டினாவை 3-1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது. இப்போது இந்தியா தனது அடுத்த போட்டியில் ஜப்பானை எதிர்கொள்ள உள்ளது.

இந்நிலையில், நேற்று வெளியான தகவல்களின் படி, டோக்கியோ ஒலிம்பிக்கில் மேலும் 16 பேருக்கு புதிதாக COVID-19 பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக விளையாட்டு ஏற்பாட்டாளர்கள்  அறிவித்துள்ளனர், இருப்பினும், அவர்களில் யாரும் விளையாட்டு வீரர்கள் அல்ல என்பதையும் அவர்கள் தெளிவுபடுத்தினர். இந்த 16 பாதிப்புகளையும் சேர்த்து, டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை 169 ஆக உயர்ந்துள்ளது. நான்கு நாட்களில் முதல் முறையாக ஒலிம்பிக் விளையாட்டு வீரர்கள் யாருக்கும் கொரோனா தொற்று பரவவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.