இந்தியாவில் இருந்து துபாய் செல்லும் விமானங்களை மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.
மறு அறிவிப்பு வரும் வரை இந்தியாவிலிருந்து துபாய்க்கு விமான சேவைகள் நிறுத்தம்! எத்ஹாட் ஏர்வேஸ்! (ETIHAD)
டெல்லி : எத்ஹாட் (ETIHAD) ஏர்வேஸ் இந்தியாவில் இருந்து துபாய் செல்லும் விமானங்களை மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்துவதாக அறிவித்துள்ளது
இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரிப்பதால் அங்கிருந்து விமானங்கள் வர ஐக்கிய அரபு அமீரகம் தடை விதித்துள்ளதாக விமான சேவையை எத்ஹாட் ஏர்வேஸ் ரத்து செய்துள்ளது.
இது தொடர்பாக எத்ஹாட் ஏர்வேஸ் செய்தி தொடர்பாளர் கூறுகையில், “சமீபத்தில் ஐக்கிய அரபு அமீரக அரசு வெளியிட்ட தடை உத்தரவுகளைத் தொடர்ந்து, இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு எத்ஹாட்டின் பயணிகள் விமான சேவைகள் மறு அறிவிப்பு வரும் வரை இயக்கப்படாது.
இந்தியாவில் இருந்து பயணிகளை ஏற்றிச்செல்ல எத்ஹாட்டிற்கு அனுமதி இல்லை.
இருப்பினும், ஐக்கிய அரபு அமீரக குடிமகன்கள், தூதர்கள் , அரசு அலுவல் பூர்வமான பிரதிநிதிகள் மற்றும் துபாயில் நிரந்தர குடியுரிமை வை;த்திருப்பவர்கள் ஐக்கிய அரபு எமிரேட் டிற்கு வருவதற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட பயணிகள் வருகைக்கு அமீரகம் ஒப்புதல் அளித்தாலும் தனிமைப்படுத்தப்பட்ட நிபந்தனைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள், “என்று செய்தித் தொடர்பாளர் கூறினார்.
எனினும் எத்ஹாட் நிறுவனம் தொடர்ந்து இந்தியாவுக்கு சரக்கு விமானங்களை இயக்கும் என்றும் அறிவத்துள்ளது சரக்கு விமானங்கள் இரு திசைகளிலும் எந்தவித பாதிப்பும் இன்றி தொடர்ந்து இயங்கும் என்று விமான நிறுவனம் தெரிவித்துள்ளது
NEWS: S.MD.ரவூப்