Airtel அதிரடி அறிவிப்பு…

பார்தி ஏர்டெல் நிறுவனம் தனது ப்ரீபெய்ட் ரீசார்ஜ் போர்ட்ஃபோலியோவின் மலிவு விலை ரீசார்ஜ் பிளான் ஆன ரூ.49-ஐ நிறுத்தி அதற்கு பதிலாக ரூ.79-ஐ அறிவித்துள்ளது. இந்த ம்ட்ட்ரம் இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது. 

ரூ.49 ஏர்டெல் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம்
ரூ.49 ஏர்டெல் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் (Prepaid Recharge Plans) திட்டமானது ரூ.38.52 டால்க் டைம், 100MB டேட்டா மற்றும் 28 நாட்கள் செல்லுபடியை வழங்கியது. ஆனால் இன்று முதல் ஏர்டெல் (Airtel) பயனர்கள் இனிமேல் 28 நாட்கள் செல்லுபடியாகும் ரூ.49 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை அணுக முடியாது. 

ர.79 ஏர்டெல் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம்
ரூ.79 ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டமானது ரூ.64 டால்க் டைம், வினாடிக்கு 1 பைசா உள்ளூர் / எஸ்.டி.டி அழைப்பு விகிதத்தில் கட்டணம், 106 நிமிடங்கள் வெளிச்செல்லும் அழைப்புகள் மற்றும் 200MB டேட்டா போன்ற நன்மைகளை அதே 28 நாட்கள் என்கிற செல்லுபடியின் வழங்கும்.

கடந்த மே மாதத்தில் நாட்டில் அதிகரித்த COVID-19 கேஸ்களுக்கு இடையே வாடிக்கையாளர்களுக்கு உதவுவதற்காக ரூ.49 இலவசமாகவும் மற்றும் ரூ.79 ஆனது டபுள் நன்மைகளையும் வழங்கும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதனை தொடர்ந்து, தற்போது ஏர்டெல் தனது மலிவான மாதாந்திர ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டமான ரூ.49ஐ நிறுத்தியுள்ளது.