உத்தரகாண்டில் 6.ஆம்வகுப்பு12 .ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்க அனுமதி.
உத்தரகாண்டில் வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் 6 முதல் 12 வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது.
டோராடூன்,
கொரோனா பெருந்தொற்றின் 2-வது அலை பெரும்பாலான மாநிலங்களில் கட்டுக்குள் வந்துள்ளது. இதனால், தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் கடுமையான கட்டுப்பாடுகளை அமல்படுத்திய மாநிலங்கள் தற்போது தளர்வுகளை அறிவித்து வருகின்றன.
அந்த வகையில் பள்ளிகளையும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், உத்தரகாண்டில் வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் 6 முதல் 12 வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது.
தமிழ் மலர் மின்னிதழ் செய்தியாளர்M G.தமீம் அன்சாரி.