வைரலாகும் தனுஷ் பிறந்தநாள்…
கிரேக்க மன்னர்கள் போன்று வடிவமைத்த தனுஷின் படத்தை காமன் டிபியாக தயாரிப்பாளர் தாணு வெளியிட்டுள்ளார்.
தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு தனுஷின் புகைப்படத்தை வைத்து காமன் டிபியாக தயாரிப்பாளர் தாணு வடிவமைத்த வெளியிட்டுள்ளார்.
அந்த காமன் டிபியில் நடிகர் தனுஷ் (Dhanush) பழங்கால கிரேக்க மன்னர் போல உள்ளார். அங்கி போன்ற உடையை ஒரு தோள்பக்கமாக முடிந்திருப்பார்கள். அதே தோற்றத்தில், தங்க நாணயத்தில் இடம்பெற்றிருக்கும் தங்க முத்திரைப் போன்று இது வடிவமைக்கப்பட்டுள்ளது. நேற்றிரவு தயாரிப்பாளர் கலைபுலி எஸ் தாணு (Kalaippuli S Thanu) இந்த புகைப்படத்தை தனது ட்விட்டரில் வெளியிட்டார். அவர் வெளியிட்ட இந்த பதிவை உடனேயே ரசிகர்கள் பெருவாரியாக பகிர ஆரம்பித்தனர்.
இந்நிலையில் டிகர் தனுஷ் இன்று தனது 38 வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர் என பன்முகத் திறமைகளைக் கொண்ட தனுஷ் இதுவரை நான்கு தேசிய விருதுகளை வென்றிருக்கிறார். தற்போது, கார்த்திக் நரேனின் மாறன் படத்தில் நடித்துவரும் தனுஷ் செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன், இயக்குநர்கள் ராம்குமார், சேகர் கம்முலா, மாரி செல்வராஜ் இயக்கங்களில் அடுத்தடுத்து நடிக்கவிருக்கிறார்.