5 விக்கெட் வித்தியாசத்தில் திருச்சியை வீழ்த்தியது திண்டுக்கல்..
திண்டுக்கல் அணி 5 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
முதலில் பேட் செய்த திருச்சி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 145 ரன்கள் எடுத்தது இருந்தது. இதில் நிதிஷ் ராஜகோபால் 45 ரன்னும், மொகமது கான் 26 ரன்னும் எடுத்தனர். இதையடுத்து, 146 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திண்டுக்கல் அணி களமிறங்கியது.
அதன்படி தொடக்க ஆட்டக்காரர் ஹரி நிஷாந்த் 26 பந்துகளில் 38 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில், திண்டுக்கல் அணி 5 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதில் நிதாமாகவும் பொருப்புடனும் விளையாடிய மோகித் ஹரிஹரன் 41 ரன்னும், சுவாமிநாதன் 11 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.