₹6200 கோடிக்கு ₹14,000 பறிமுதல் செய்வதா; விஜய் மால்லையா காட்டம்
விஜய் மல்லையாவிற்கு கடன் வழங்கிய ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா கூட்டமைப்பை சேர்ந்த 13 நிதி நிறுவனங்கள் விஜய் அவருக்கு எதிராக வழக்கு நடத்தி வருகின்றன.
- ஜூன் 25, 2013 முதல், 11.5 சதவீத கூட்டு வட்டியின் அடிப்படையில் வட்டித் தொகை கணக்கிடப்பட்டு கடன் தொகை வசூலிக்கப்படும்.
- ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா கூட்டமைப்பை சேர்ந்த 13 நிதி நிறுவனங்கள் விஜய் மால்யாவிற்கு எதிராக வழக்கு நடத்தி வருகின்றன. லண்டன் உயர்நீதிமன்றம் தீர்ப்பை அடுத்து தப்பியோடிய குற்றவாளி என அறிவிக்கப்பட்ட விஜய் மால்யா, ட்வீட் ஒன்றை பதிவிட்டு, 6,200 கோடி ரூபாய்க்கு கடனுக்காக, 14,000 கோடி ரூபாய் மதிப்புள்ள தனது சொத்துக்களை அமலாக்க இயக்குநரகம் பறிமுதல் செய்கிறது என்றார். அமலாக்க துறைக்கு பணத்தை திருப்பித் தர வேண்டியிருப்பதால் வங்கிகள் அவரை திவாலாக்குகின்றன என்ற குற்றச்சாட்டையும் அவர் முன்வைத்துள்ளார். விஜய் மல்லையாவிற்கு கடன் வழங்கிய ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) கூட்டமைப்பை சேர்ந்த 13 நிதி நிறுவனங்கள் அவருக்கு எதிராக வழக்கு நடத்தி வருகின்றன. விஜய் மால்யா வாங்கிய கடனுக்கு, ஜூன் 25, 2013 முதல், 11.5 சதவீத கூட்டு வட்டியின் அடிப்படையில் வட்டித் தொகை கணக்கிடப்பட்டு கடன் தொகை வசூலிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.