தூத்துக்குடியில் எழுச்சியுடன் நடைபெற்ற மஜக மாவட்ட அலுவலகம் திறப்பு விழா!

தூத்துக்குடி புறநகர் மாவட்டம் மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட அலுவலக திறப்பு விழா மாவட்ட செயலாளர் முகம்மது நஜிப், அவர்கள் தலைமையில் காயல்பட்டினத்தில் வைத்து நடைப்பெற்றது.

நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் மீராசாஹிப், முன்னிலை வகித்தார், மாவட்ட பொருளாளர் குருகை ராசுகுட்டி, அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.

இதில் சிறப்பு அழைப்பாளராக மஜக வின் துணைச் பொதுச்செயலாளர் N.A.தைமிய்யா M.Sc. அவர்கள் கலந்து கொண்டு அலுவலகத்தை திறந்து வைத்தார்.

முன்னதாக தொண்டர்களின் எழுச்சி முழக்கங்களுக் கிடையே கட்சி கொடியினை மாநில துணை செயலாளர் A.R. சாகுல் ஹமீது, அவர்கள் ஏற்றி வைத்தார்.

மேலும் காயல் பட்டினம் நகரில் 5 இடங்களில் மஜக வின் கொடிகள் ஏற்றப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர் வழக்கறிஞர் அஹம்மது ஸாஹிப், இஸ்லாமிய கலாச்சார பேரவை அஹம்மது மீரா தம்பி, மஜக நெல்லை மாவட்ட செயலாளர் நெல்லை நிஜாம், மற்றும் மஜக மாவட்ட நிர்வாகிகள், அணி நிர்வாகிகள், மற்றும் ஒன்றிய, நகர, பேரூர், கிளை நிர்வாகிகள், திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இறுதியாக காயல்பட்டினம் நகர செயலாளர் MAJ.இப்னுமாஜா அவர்கள் நன்றியுரையாற்றினார்.

அப்துல் சமது
தலைமை செய்தி ஆசிரியர்