ஒலிம்பிக்கில் மூவர்ண கொடி ஏந்தி வீரர்கள் வலம் வந்தது பரவசத்தை ஏற்படுத்தியது: பிரதமர் மோடி
இன்றைய 79வது மன் கீ பாத் (Mann Ki Baat) நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்.
சென்னை ஐஐடி மாணவர்கள் 3D தொழில்நுட்ப முறையில் மிக குறைந்த செலவில், சில நாட்களில் வீடு கட்டி முடித்ததை குறிப்பிட்டு, லைட் ஹவுஸ் எனும் தொழில்நுட்பம் மூலம் குறைந்த செலவில் மிக விரைவாக கட்டிடங்கள் அமைக்கப்படுவது குறித்து குறிப்பிட்டார்.
– குன்னூரில் ஆட்டோ ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்தி மக்களுக்கு உதவி வரும் குன்னூர் பெண்மணியை பாராட்டிப் பேசினார். மலைப்பிரதேசத்தில் உள்ள மக்களுக்கு இதன் மூலம் உதவி கிடைப்பது மிகவும் போற்றத்தக்கது என்றார்.
திருவிழாக்கள் மற்றும் பண்டிகைகளின் போது, கொரோனா இன்னும் முழுமையாக ஒழியவில்லை என்பதை நினைவில் கொண்டு, மக்கள் கொரோனா தொடர்பான நெறிமுறைகளை கடைபிடித்து தொற்றிருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
– நாளை கார்கில் விஜய் திவஸ். கார்கில் போர் என்பது நமது ஆயுதப்படைகளின் வீர தீரத்தை பறைசாற்றிய போர். உலகம் இந்தியாவின் வலிமையை உலகம் கண்டது. கார்கில் தொடர்பான செய்திகளை அமைவருக்கு படிக்க வேண்டும் என விரும்புகிறேன். கார்கிலின் துணிச்சலான இதயங்களை நாம் வணக்குவோம்.