தமிழக சட்டசபையில் ஆகஸ்ட் 2-ம் தேதி கலைஞர் கருணாநிதி உருவப்படம் குடியரசுத் தலைவர் திறந்து வைக்கிறார்! சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு
சென்னை: சட்டசபையில் ஆகஸ்ட் 2ஆம் தேதி முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் உருவப்படத்தை குடியரசுத் தலைவர் திரு/ ராம்நாத் கோவிந்த் அவர்கள் திறந்து வைக்க உள்ளார் என சபாநாயகர் திரு/ அப்பாவு அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் 1969ம் ஆண்டு தொடங்கி ஐந்து முறை முதல்வராக இருந்தவர் மறைந்த முன்னாள் முதல்வர் முத்தமிழ் அறிஞர் கருணாநிதி திருஉருவப்படம் சட்டசபையில் வரும் ஆகஸ்ட் 2-ம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்பட உள்ளது.
முத்தமிழ் அறிஞர் கருணாநிதி யின் படத்தை குடியரசுத் தலைவர் திரு/ ராம்நாத் கோவிந்த் திறந்து வைக்க உள்ளார். இதனை சபாநாயகர் அப்பாவு உறுதி செய்து அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
முன்னதாக குடியரத் தலைவர் ராம்நாத் கோவிந்தை கடந்த திங்கள்கிழமை அன்று டெல்லி சென்று சந்தித்த முதல்வர் திரு/ ஸ்டாலின், முன்னாள் முதல்வர் முத்தமிழ் அறிஞர் கருணாநிதி யின் படத்தை திறந்து வைக்கவேண்டும் என்று நேரில் வலியுறுத்தினார்
இதேபோல் விழாவில் பங்கேற்க வேண்டும் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி யையும் அழைத்தார்.
இந்நிலையில் சபாநாயகர் அப்பாவு, மறைந்த முன்னாள் முதல்வர் முத்தமிழ் அறிஞர் கருணாநிதி படம் சட்டசபையில் திறக்கப்பட உள்ளது குறித்து அறிவித்துள்ளார் நிகழ்ச்சியில் பங்கேற்க கட்சி பாகுபாடு இன்றி அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்படும் என்றும் சபாநாயகர் அறிவித்துள்ளார்
ஆளுநர் தலைமையில் நடைபெறும் கருணாநிதியின் உருவப்படம் திறப்பு விழாவில் குடியரசு தலைவர், முதலமைச்சர் கலந்துகொள்கின்றனர் என்றும் சட்டப்பேரவை செயலகம் மூலம் நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற பணிகள் நடைபெறுகிறது என்றும் அபபாவு கூறியுள்ளார்.
NEWS: S.MD.RAWOOF