பிரேசில் அதிபர் பதவி கோரி வீதிகளில் இறங்கி போராடும் மக்கள்.0
பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ பதவி விலக வேண்டும் என கோரி சனிக்கிழமையன்று பல பிரேசிலிய நகரங்களில் ஆர்ப்பாட்டக்காரர்கள் வீதிகளில் இறங்கி போராடத் தொடங்கியுள்ளனர்.
போல்சனாரோ (Jair Bolsonaro) அடுத்த ஆண்டு மறுதேர்தலை எதிர்கொள்ள உள்ள நிலையில், இந்த வாரம், பிரேசிலின் பாதுகாப்பு அமைச்சகம், அடுத்த ஆண்டு தேர்தல்கள் நடக்காது என்றும் நாட்டின் மின்னணு வாக்குப்பதிவு முறையில், ஒப்புகை சீட்டு முறையை அறிமுகப்படுத்தி, வாக்கு எண்ணிக்கையை சரிபடுத்தாமல், தேர்தல்கள் நடத்துவது சாத்தியமல்ல என கூறியதை அடுத்து, போராட்டம் வெடித்துள்ளது.
வலது சாரி தலைவரான போல்சனாரோ அடுத்த ஆண்டு மறு தேர்தலை எதிர்கொள்ளும் நிலையில் அவருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. முன்னாள் இடதுசாரி அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வாவை அவர் எதிர்கொள்ள உள்ள நிலையில், போல்சனாரோவுக்கு ஆதரவு குறைந்து வருவதால், அவர் தோற்கும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.