பள்ளி மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு!


பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு எழுதி அதற்கான முடிவுகள் வெளியிடப்படாமல் இருந்தது. தற்போது அதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பத்தாம் வகுப்பு துணைத்தேர்வு எழுதி மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தவர்களில், மதிப்பெண்களில் மாற்றம் உள்ள மாணவர்கள், தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அரசு தேர்வு இயக்ககம் அறிவித்துள்ளது.
பட்டியல் http://www.dge.tn.gov.in/ இந்த இணையதளத்தில், தேர்வு எண் மற்றும் பிறந்த தேதி ஆகிய விவரங்களை பதிவு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பட்டியலில் இடம்பெறாத விடைத்தாள் மதிப்பெண்களில் எந்தவித மாற்றமும் இல்லை என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
K.N. ஆரிப்,
செய்தியாளர் தமிழ்மலர் மின்னிதழ்,