1 நிமிடத்தில் 37 கற்களை உடைத்து கின்னஸ் சாதனை – மோடிக்கு அர்ப்பணித்த மதுரை வீரர்

மதுரையை சேர்ந்த டேக்வாண்டோ வீரர் 1 நிமிடத்தில் 37 கான்கிரீட் கற்களை உடைத்து படைத்த கின்னஸ் சாதனையை பிரதமர் நரேந்திர மோடிக்கு அர்ப்பணித்து உள்ளார்.

உச்சமாக கடந்த ஏப்ரல் மாதம், 1 நிமிடத்தில் 37 கான்கிரீட் கற்களை தன் ஒற்றை காலால் உடைத்து தகர்த்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்து உள்ளார். இந்த சாதனை டேக்வாண்டோ விளையாட்டில் இதுவரை யாருமே செய்யாத சாதனை என்று பெருமை பொங்க கூறுகிறார் நாராயணன்.

தன்னுடைய சாதனை கதைகள் குறித்து பேசியவர்,
“1 நிமிடத்தில் 23 தர்பூசணி பழங்களை உடைத்தது, கால்களில் தலா 10 கிலோ எடையை கட்டிகொண்டு 3 நிமிடத்தில் 138 முறை கிக் செய்தது, கைகளில் தலா 1 கிலோ எடையை பிடித்துக் கொண்டு கைகளை முழுமையாக மடக்கி நீட்டி (Full extension punch) பஞ்ச் செய்தது போன்ற சாதனைகள் எனக்கே சவாலாகவும், பெருமையாகவும் அமைந்தவை.

அதிலும், கடைசியாக செய்த கான்கிரீட் கற்களை உடைக்கும் சாதனையை மேற்கொள்வதற்காக 6 மாதம் தொடர் பயிற்சி செய்தேன். அதனால் கால் பாதத்தில் கடும் வலி ஏற்பட்டு இரண்டு மாதங்கள் சரியாக நடக்க கூட முடியாமல் தவித்தேன். இப்போது இந்த வெற்றியின் மூலமாக வரலாற்று சாதனையை என்னால் நிகழ்த்த முடிந்திருக்கிறது என்பதில் மிகவும் பெருமை கொள்கிறேன்” என்றார்.