சீனாவில் புயலால் நிலச்சரிவு எச்சரிக்கை ..

டைபூன் இன்-ஃபா புயலின் காரணமாக நிலச்சரிவு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் ரயில், துறைமுகம், விமானப் போக்குவரத்தை ஜெஜியாங் பகுதியில் சீனா நிறுத்தியுள்ளது. மத்திய சீனா பகுதியில் பெய்த வரலாறு காணாத மழையின் காரணமாக அந்நாடு மிகப்பெரிய பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளது. இந்தநிலையில், கடலில் மையம் கொண்டுள்ள டைபூன் இன் ஃபா புயல் இன்று மாலையில் ஜெஜியாங் பகுதியில் தாக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்தப் புயலின் வேகம் 155 முதல் 191 கி.மீ வரையில் இருக்கும். அதனால், கடலில் பெரும் அலைகள் மற்றும் கடும் மழை பெய்துவருகிறது. இந்த புயல் மற்றும் மழையின் காரணமாக நிலச்சரிவு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.