இன்ஸ்டாகிராமில் வைரலாகும் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி..

ஸ்மிருதி இரானியின் பெரும்பாலான போஸ்டுகள் வைரலாகி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் சிறுமிகளுக்கு ‘பறக்க சிறகுகளைக் கொடுங்கள்’ என்ற அருமையான செய்தியுடன் கூடிய அனிமேஷன் வீடியோ ஒன்றை ஷேர் செய்திருந்தார்.

, இன்ஸ்டாகிராமில் தனது வேலை மற்றும் வாழ்க்கை பற்றி அதிகம் பேசும் ஸ்மிருதி, தற்போது சுவாரஸ்யமான விஷயங்கள் குறித்து ஷேர் செய்து வருகிறார். சில நேரங்களில் இன்ஸ்டா ஸ்டோரியில் தனது பாலோயர்ஸ்களுக்காக விலைமதிப்பற்ற ஆலோசனைகளை பகிர்ந்து கொள்வதிலும் ஆர்வமாக ஈடுபட்டுள்ளார்.

ஸ்மிருதி, கடந்த வெள்ளிக்கிழமை ஒரு சுவாரஸ்யமான விஷயத்தை பகிர்ந்து கொண்டார்,  அது ஒரு முக்கியமான செய்தியையும் தெரிவிக்கிறது.அதில் “கடின உழைப்புக்கு மாற்று இல்லை” என்ற உண்மையை தெரிவித்திருந்தார். Will Ferrell என்ற அமெரிக்க நடிகர் கூறிய ஒரு மேற்கோளை ஸ்மிருதி பகிர்ந்து கொண்டார். இந்த செய்தியானது முக்கியமாக திருமணமான தம்பதிகளுக்கு அர்ப்பணிக்கப்பட்டது .