IT ரீபண்ட் கிடைப்பதில் தாமதம்…
- வரி செலுத்துவோருக்கு முக்கியமான செய்தி
- வருமான வரிக்கான புதிய போர்டலில் சிக்கல்கள்
- ஐடி பணத்தைத் திரும்பப் பெறுவதில் தாமதம் ஏற்படலாம்.
Income Tax Refund Status: வரி செலுத்துவோருக்கு முக்கிய செய்தி. வருமான வரி தாக்கலை (Income Tax Return) எளிதாக்க, மின்னணு முறையில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான புதிய இணையதளம் ஜூன் மாதம் 7ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிலையில், வருமான வரித்துறையின் போர்டலான http://www.Incometax.Gov.In/ என்ற தளத்தில் சிக்கல்கள் உள்ளன.
இதன் காரணமாக வருமான வரித் துறை வழங்கும் ரீபண்ட் இந்த ஆண்டு தாமதமாகலாம். வருமான வரியின் இந்த புதிய போர்ட்டலில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக, பணத்தைத் திரும்பப் பெறுவதில் சிக்கல் இருக்கலாம். இந்த போர்டல் தொடங்கப்பட்டதிலிருந்து, சில சிக்கல்கள் அவ்வப்போது ஏற்பட்டு வருகின்றன. இதனால் வரி செலுத்துவோரின் பணத்தை ரீபண்ட் செய்வதில் ஆகலாம். உண்மையில், வருமான வரித்துறை ஒரு புதிய போர்ட்டலை http://www.Incometax.Gov.In/ ஜூன் 7 அன்று அறிமுகப்படுத்தியது. ஆனால் தொடங்கப்பட்ட முதல் நாளிலிருந்து, இந்த இணையதளத்தில் சிக்கல்கள் உள்ளன. இது குறித்து சமூக ஊடகங்களில் நிறைய விவாதம் நடந்தது. பின்னர் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வலைத்தளத்தை தயாரித்த பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸின் தலைவரான நந்தன் நிலேகானியை அழைத்து பேசியதை அடுத்து, அனைத்து குறைபாடுகளும் நீக்கப்பட்டன. ஆனால் இன்னும் அதில் சிக்கல்கள் உள்ளன