இந்தியாவின் பிவி சிந்து பாட்மிண்டன் முதல் சுற்றில் வெற்றி..

டோக்யோ ஒலிம்பிக் போட்டிகளில் பாட்மிண்டன் மகளிர் பிரிவில் நடைபெற்ற முதல் சுற்றுப் போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பிவி சிந்து அபார வெற்றிப் பெற்றார்.

இஸ்ரேலின் போலிகர்போவை எதிர்த்து ஆடிய பிவி சிந்து தொடக்கத்தில் இருந்தே அதிரடியாக விளையாடி வந்தார்.  முதல் செட் போட்டியில்  21-7 என்ற கணக்கிலும், இரண்டாவது செட் போட்டியில் 21-10 என்ற கணக்கிலும் வென்று போலிகர்போவை தோற்கடித்து அடுத்த சுற்றுக்கு தகுதிப் பெற்றார்.

.