பயங்கர கார் விபத்து; நடிகை யாஷிகா ஆனந்த் படுகாயம்: தோழி மரணம்

மாமல்லபுரம் அருகே நடந்த விபத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் படுகாயகங்களுடன் மருத்துவமனையில் அனுமதி. இந்நிலையில், நண்பர்களுடன் கிழக்கு கடற்கரை சாலையில் காரில் வேகமாக சென்றபோது, செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே சூளேரிக்காடு பகுதியில் உள்ள சாலை தடுப்பில் மோதி கார் கவிழ்ந்ததில் நடிகை யாஷிகா ஆனந்த் (Yashika Aannand) படுகாயம் அடைந்தார். அவருடன் பயணம் செய்த இரண்டு பேருக்கும் படுகாயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. படுகாயம் அடைந்த யாஷிகா ஆனந்த் மற்றும் நணபர்கள் இரண்டு பேரையும் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் கார் நிலை தடுமாறி சாலை நடுவே உள்ள தடுப்பு சுவரில் மோதியதில் அவருடன் காரில் சென்ற அவரது தோழி பவானி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.