4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் 4 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்துக்கு அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவக்காற்று காரணமாக, தமிழகத்தின் (Tamil Nadu) நீலகிரி, கோவை, தேனி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு அதிகனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நான்கு மாவட்டங்களைத் தவிர மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களான திண்டுக்கல், தென்காசி ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் லேசான மழை (TN Rain) பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், திருநெல்வேலி, தூத்துக்குடி, ஈரோடு, சேலம், மதுரை, விருதுநகர், தர்மபுரி, நாமக்கல், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான முதல் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.