Tokyo Olympics 2020: டோக்கியோ ஒலிம்பிக்கில் வெற்றி…

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில், இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை பெற்று தந்துள்ளார் மீராபாய் சானு, கோலாகலமாக நேற்று தொடங்கிய  போட்டிகள் ரசிகர்கள் இன்றி நடைபெற்று வருகின்றன.


டோக்கியோ
: கொரோனா காலகட்டத்தில் நடைபெறும் முக்கிய விளையாட்டு நிகழ்வான ஒலிம்பிக் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகின்றன, ஒலிம்பிக் 2020 போட்டிகள் நேற்று கோலாகலமாக தொடங்கின. கொரோனா காரணமாக, ரசிகர்கள் இன்றி போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இன்று  காலை முதல் பல்வேறு பிரிவிலான போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. 

மீராபாய் சானு ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கான முதல் பதக்கத்தை வென்றுள்ளார், பளுதூக்குதல்  போட்டியில் மீராபாய் சானு வெள்ளிப் பதக்கம் வென்றார்.

இன்று காலை நடந்த ஹாக்கி போட்டி ஆண்கள் பிரிவில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதின. 3-2 என்று கோல் கணக்கில் இந்தியா வெற்றிப் பெற்றது. 

இன்று  துப்பாக்கி சுடுதலில் பெண்கள் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் போட்டியில், இந்தியாவின் இளவேனில் வாலறிவன் மற்றும் அபூர்வி சண்டேலா ஆகியோர் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தனர். துப்பாக்கிச் சூட்டில் இரண்டு முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற இளவேனில் வாலறிவன் பதக்கம் வெல்வார் என்ற எதிர்பார்ப்பு பொய்த்துப்போனது. 

சீனா, டோக்கியோ ஒலிம்பிக் தொடரில் இன்று முதல் தங்கத்தை வென்றிருக்கிறது சீனா. பெண்கள் 10 மீட்டர் ஏர் ரைபிள் இறுதிப் போட்டியில் சீனாவின் யாங் கியான் (Yang Qian) தங்கம் வென்றதுடன் புதிய சாதனையும் படைத்துள்ளார். சீனாவின் கியான் பெற்ற மொத்த புள்ளிகள் 251.8 ஆகும். இதுதான் ஒலிம்பிக் தொடரில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவின் அதிகபட்ச புள்ளிகளாகும். ரஷ்யாவின் அனஸ்தேசியா கலாஷினா வெள்ளிப் பதக்கம் வென்றார். சுவிட்சர்லாந்தின் நினா கிறிஸ்டன் வெண்கலப் பதக்கம் வென்றார்.  

வில்வித்தை போட்டிகளில் கலப்பு அணிகள் பிரிவு வெளியேற்றச் சுற்றில், இந்தியாவின் பிரவீன் ஜாதவ் – தீபிகா குமாரி இணை காலிறுதிக்கு முன்னேறியது. இன்று காலை நடைபெற்ற இப்போட்டியில் சீன தைபே அணியை – இந்திய அணி எதிர்கொண்டது. இதில், 5-3 என்ற கணக்கில் வென்று இந்தியா காலிறுதிக்கு முன்னேறியது.