தனது எஜமானரை காக்க பாம்புடன் சண்டையிட்ட பூனை

Cat Fight With Cobra: வீட்டு விலங்குகள் எஜமனார்களுக்கு விசுவாசமாக இருக்கும் என்பதை நாம் பல வகைகளில் பார்த்திருக்கிறோம். அதிலும் நாய்கள் பற்றி அதிகம் கேள்விப்ப்ட்டிருக்கிறோம். ஆனால், இங்கே நாம் ஒரு பூனையில் விசுவாசம் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.ஒடிசாவின் புவனேஸ்வரில், பூனை, தனது எஜமானரின் உயிரைக் காப்பாற்ற நாகத்துடன் சண்டையிட்டது. நாக பாம்பை எஜமானரின் வீட்டிற்குள் செல்ல பூனை அனுமதிக்கவில்லை. இரண்டுக்கும் இடையிலான சண்டை சுமார் 30 நிமிடங்கள் தொடர்ந்தது. ஆனால் பூனை பயப்படாமல் போரிட்டது.பாம்பை பிடிப்பவர்  வரும் வரை பூனை அதன் இடத்திலிருந்து நகரவில்லை. அது தொடர்ந்து நாகம் மீது ஒரு கண் வைத்திருந்தார், அதை வீட்டிற்குள் நுழைய அனுமதிக்கவில்லை.