நீரிழிவு முதல் பல நோய்களை தீர்க்கும் கூர்மாசனம்…
யோகாசனத்தில் முக்கிய ஆசனமான கூர்மாசனம் அல்லது ஆமை போஸ் யோகா என்று அழைக்கப்படும் இந்த ஆசனம் ஆமை வடிவத்தைப் பிரதிபலிக்கும். கூர்மா என்றால் சமஸ்கிருதத்தில் ஆமை என்று பொருள். இந்த ஆசனம் கால்கள், வயிறு, தொடைகள் மற்றும் தொடை எலும்புகளை நீள்சியடைய செய்ய உதவும்.யோகாசனம் செய்வது நமது உடல் மற்றும் மனத்துக்கு பலவித ஆரோக்கிய நன்மைகளை அள்ளித் தரும் என்பது நம்மில் பலருக்கும். ஆமை வடிவ போஸில் இருக்கும் இந்த ஆசனத்தை செய்யும் போது, உங்கள் நுரையீரலில் அதிக அளவில் ஆக்ஸிஜன் நிரப்பப்படும். ஆக்சிஜனை ஆழமாக உள்ளிழுத்து பின்னர் மெதுவாக வெளியேற்றுவது ஆஸ்துமா நோயாளிகளுக்கு சுவாசிக்கும் போது ஏற்படும் பிரச்சனைகளை அகற்ற உதவும். மேலும், எளிதில் சுவாசிக்கவும் இந்த ஆசனம் உதவுகிறது. கூர்மசனா நுரையீரலை வலுப்படுத்தவும் உதவுகிறது.