ICSE 10 ஆம் வகுப்பு, ISC 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை..

ஐசிஎஸ்இ, ஐஎஸ்சி வாரியம், 2021 ஆண்டுக்கான தேர்வு முடிவுகளை  நாளை மாலை 3 மணிக்கு  அறிவிக்கும். ஏறக்குறைய 3 லட்சம் மாணவர்கள் ஐ.சி.எஸ்.இ., ஐ.எஸ்.சி அறிவிக்கும் தேர்வு முடிவுகளுக்காக காத்திருக்கிறார்கள்.

ICSE (Class 10th) and ISC (Class 12th) result: ஐசிஎஸ்இ, ஐஎஸ்சி வாரியம், 2021 ஆண்டுக்கான தேர்வு முடிவுகளை  நாளை மாலை 3 மணிக்கு  அறிவிக்கும். ஏறக்குறைய 3 லட்சம் மாணவர்கள் ஐ.சி.எஸ்.இ., ஐ.எஸ்.சி அறிவிக்கும் தேர்வு முடிவுகளுக்காக காத்திருக்கிறார்கள். தேர்வு முடிவுகள் ஜூலை 24 சனிக்கிழமையன்று கவுன்சிலின் அதிகாரப்பூர்வ வலைத்தளங்களான cisce.org மற்றும் results.cisce.org  வலைதளங்களில் முடிவுகள்  வெளியாகும்.

வாரிய செயலாளர் ஜெர்ரி அராத்தூன் வெள்ளிக்கிழமை  தேர்வு முடிவுகளை அறிவிப்பதற்கான தேதி குறித்த அறிவிப்பை வெளியிட்டார். “10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகளின் முடிவுகள் ஜூலை 24 சனிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு அறிவிக்கப்படும்” என்று அவர் கூறினார்.

 கவுன்சிலின் அதிகாரப்பூர்வ வலைத்தளங்களில் மாணவர்கள் தங்கள் முடிவுகளை cisce.org மற்றும் results.cisce.org ஆகிய வலைதளங்களில் பெறலாம்.

– ‘Results 2021’ என்ற இடத்தில் கிளக் செய்யவும்

– மாணவர்களில் தனிப்பட்ட ஐடி, குறியீட்டு எண் மற்றும் CAPTCHA உள்ளிட்ட தேவையான தகவல்களை உள்ளிடவும்.

 அனைத்து தகவல்களையும் பூர்த்தி செய்த பிறகு, submit என்பதைக் கிளிக் செய்க

– தேர்வு முடிவுகள் திரையில் தோன்றும்.

– எதிர்கால தேவைக்காக, அதனை பதிவிறக்கம் செய்து அச்சிடுக.

முடிவுகள் அறிவிக்கப்பட்டதும், மாணவர்கள் cisce.org வலைத்தளத்திலும் பார்க்கலாம்.  இது தவிர, எஸ்எம்எஸ் மற்றும் செயலி மூலமாகவும் முடிவுகளை பெறலாம்.