டோக்கியோ ஒலிம்பிக் 2020 திருவிழா ஆரம்பம்!

Tokyo Olympic 2020 Opening Ceremony: மிகவும் எதிர்பார்க்கப்பட்ட டோக்கியோ ஒலிம்பிக் 2020 கொரோனா தொற்று பரவல் அச்சத்திற்கு மத்தியில்தான் இன்று கோலாகலமாக தொடங்கவுள்ளது. ஒரு பக்கம் கொரோனா தொற்று பரவிவரும் நிலையில், தொடக்க விழா திட்டமிட்டபடி நடைபெறும் என்பதில் ஜப்பான் உறுதியாக உள்ளது.

  • ஜப்பானின் பிரதமருக்கு வாழ்த்துக் கூறிய இந்தியப் பிரதமர்.
  • 80 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
  • இந்தியாவில் டோக்கியோ ஒலிம்பிக் 2020 நேரடியாக ஒளிபரப்பும் சோனி ஸ்போர்ட்ஸ்.

Tokyo Olympic 2020 Opening Ceremony: டோக்கியோ 2020 ஒலிம்பிக் திருவிழா தொடங்குவதற்கு முன்னதாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று (வெள்ளிக்கிழமை) ஜப்பானின் பிரதமர் யோஷிஹிடே சுகாவுக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். உலகளாவிய COVID-19 தொற்றுநோய் காரணமாக ஒரு வருடம் ஒத்திவைக்கப்பட்ட பின்னர், டோக்கியோ ஒலிம்பிக் 2020 தொடங்கத் தயாராக உள்ளது. 

டோக்கியோ ஒலிம்பிக் 2020 திறப்பு விழா நேரடி ஒளிபரப்பு:
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட டோக்கியோ ஒலிம்பிக் 2020 கொரோனா தொற்று பரவல் அச்சத்திற்கு மத்தியில்தான் இன்று கோலாகலமாக தொடங்கவுள்ளது. ஏற்கனவே ஒலிம்பிக் விளையாட்டு கிராமத்தில் இருத்த பலருக்கு கோவிட் -19 தொற்று ஏற்பட்டிருப்பது குறித்த கவலைகள் எழுந்துள்ளன. தற்போது வரை 80 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இவை அனைத்திற்கும் இடையில், தொடக்க விழா திட்டமிட்டபடி நடைபெறும் என்பதில் ஜப்பான் உறுதியாக உள்ளது.