Covaxin: AIIMS தில்லியில் 2-6 வயது குழந்தைகளுக்கு 2வது டோஸ் பரிசோதனை விரைவில்

எய்ட்ஸ் டெல்லி அடுத்த வாரத்திற்குள் 2-6 வயது குழந்தைகளுக்கு  பாரத் பயோடெக்கின் கோவாக்சின் இரண்டாவது டோஸ் செலுத்தி  சோதனையைத் தொடங்க உள்ளது.

  • பாரத் பயோடெக் அடுத்த வாரம் 2 முதல் 6 வயது வரையிலான குழந்தைகளுக்கு கோவாக்சின் 2வது டோஸ் வழங்கும்.
  • முதல் சோதனை 12-18 வயதுக்குட்பட்டவர்களிடம் தொடங்கப்பட்டது.
  • அதன்பிறகு 6-12 வயது மற்றும் 2-6 வயதுக்குட்பட்டவர்களுக்கு செலுத்தி தற்போது பரிசோதனை செய்யப்படுகிறது.

அண்மையில், 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான கோவிட் -19 தடுப்பூசிகளின் மருத்துவ பரிசோதனைகள் விரைவில் நிறைவடையும் என்று மத்திய அரசு தில்லி உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்தது.

இதற்கிடையில், ஜைடஸ் காடிலாவின் (Zydus Cadila) DNA தடுப்பூசி 12 முதல் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கான மருத்துவ பரிசோதனையை முடித்துவிட்டதாக அரசாங்க அதிகாரிகள் முன்னதாக உச்ச நீதிமன்றத்திற்கு தெரிவித்திருந்தனர்.

தற்போது, இந்தியாவில், 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கோவிஷீல்ட் கோவேக்ஸின், ஸ்பூட்னிக் வி ஆகிய தடுப்பூசிகள்  வழங்கப்பட்டு வருகின்றன. இது வரை 41 கோடிக்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.